புதுச்சேரியில் காட்டுப்பன்றியை வேட்டையாட பயன்படுத்திய வெடிமருந்து எதிர்பாராதவிதமாக வெடித்ததில் ஜெரினா என்ற பெண் உயிரிழந்தார். அவரது மருமகன் பாண்டியன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வில்லியனூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.