கந்துவட்டி கொடுமையால் பெண் தீக்குளித்து உயிரிழப்பு

2பார்த்தது
கந்துவட்டி கொடுமையால் பெண் தீக்குளித்து உயிரிழப்பு
புதுச்சேரி நெல்லித்தோப்பு சக்தி நகரைச் சேர்ந்த சித்ரா, குடும்ப சூழ்நிலை காரணமாக கிறிஸ்டினா என்பவரிடம் 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதற்கு வட்டியாக சுமார் மூன்று லட்சம் ரூபாய் செலுத்தியும், கடந்த இரண்டு மாதங்களாக வட்டி கட்டாததால், கிறிஸ்டினா சித்ராவின் வீட்டிற்குச் சென்று தகாத வார்த்தைகளால் பேசி அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சித்ரா, கடந்த 7ஆம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி