சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற உலக செவித்திறன் பேரணி

0பார்த்தது
உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி, ஆண்டுதோறும் மார்ச் 3-ம் தேதி உலக செவித்திறன் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, இன்று புதுச்சேரி சுகாதாரத்துறையும் தேசிய காது கேளாமை தடுப்பு பிரிவும் இணைந்து நடத்திய மாபெரும் உலக செவித்திறன் பேரணி நடைபெற்றது. சுகாதாரத்துறை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேல் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி