ஜிப்மரில் இளநிலை மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

0பார்த்தது
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 26 இளநிலை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்று ஓராண்டு இன்டர்ன்ஷிப் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வருகிற 27-ந் தேதி மதியம் 3 மணிக்குள் ஜிப்மர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மறுநாள் 28-ந் தேதி காலை 9 முதல் 10 மணி வரை எழுத்துத்தேர்வும், தகுதி பெறுவோருக்கு மதியம் 2 மணிக்கு நேர்காணலும் நடைபெறும் என ஜிப்மர் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி