கீழே கிடந்த தங்க நகையை போலீசாரிடம் ஒப்படைத்த இளநீர் வியாபாரி

0பார்த்தது
புதுச்சேரி சந்தை புதுகுப்பத்தைச் சேர்ந்த முத்தையன் என்பவர் தனது தாயாருடன் பைக்கில் சென்றபோது, ரூ. 4 லட்சம் மதிப்பிலான 3.5 சவரன் தங்கநகை தவறி விழுந்தது. தவளக்குப்பம் முத்துமுதலியார் நகரைச் சேர்ந்த இளநீர் வியாபாரி முருகன், சாலையில் கிடந்த பர்ஸை எடுத்துப் பார்த்தபோது அதில் நகைகள் இருந்தன. அவர் உடனடியாக அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நகையைத் தவறவிட்ட முத்தையனிடம் ஒப்படைத்தனர். நகையை ஒப்படைத்த வியாபாரி முருகனை காவல்துறையினர் பாராட்டி வாழ்த்தினர்.
Job Suitcase

Jobs near you