புதுச்சேரி நர்சுக்கு வரதட்சணை கொடுமை விவகாரம்; வாலிபருக்கு 2 ஆண்டு சிறை

62பார்த்தது
புதுச்சேரி நர்சுக்கு வரதட்சணை கொடுமை விவகாரம்; வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
புதுச்சேரி காலாப்பட்டு நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகன் செல்வதிருமால் (வயது 32). இவருக்கும் வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை செய்து வரும் நந்தினி (30) என்பவருக்கும் கடந்த 26.3.2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது 25 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை செல்வதிருமால் தாக்கி கொடுமைப்படுத்தினார். 

இது குறித்து வில்லியனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நந்தினி புகார் செய்தார். அதன்பேரில் செல்வதிருமால், அவரது தாயார் மலர்கொடி ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் செல்வதிருமால் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மலர்கொடி மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கணேஷ் ஞானசம்பந்தன் ஆஜராகி வாதாடினார்.

தொடர்புடைய செய்தி