
புதுச்சேரி: ரங்கசாமி இன்று 5-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்பு
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, இன்று (மே 13) காலை 5-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த நிலையில், அவருடன் நமச்சிவாயம் மற்றும் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.





























