
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி
“சமூக நீதி, பகுத்தறிவு மற்றும் மாநில சுயாட்சி பேசும் தமிழ்நாட்டின் குரலை நாடாளுமன்றத்தில் ஒடுக்க முடியாது" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். Indian Express நாளேடுக்கு அவர் அளித்த பேட்டியில், “1950-60களில் நடந்த போராட்டங்கள் இந்தியாவிற்கு எதிரானவை அல்ல. கூட்டாட்சியை மதிக்கும் ஒரு ஒன்றியமாக இந்தியாவை அவை வடிவமைத்தன. அரசு கடமை தவறும்போது, மக்களின் வெளிப்பாடு எப்படி இருக்கும்? என்பதை அந்த வரலாறு சொல்கிறது. இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி” என்றார்.




























