
நெடுவாசல் பகுதியில் நாளை மின்தடை!
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (7/11/2025) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும். பட்டத்திக்காடு, வேட்டையார் கோவில், திருமுருகன்பட்டினம், குரும்பிவயல், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.




























