ஆலங்குடி விவசாயி எடுத்த விபரீத முடிவு!

0பார்த்தது
ஆலங்குடி விவசாயி எடுத்த விபரீத முடிவு!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பனங்குளம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த 49 வயது விவசாயி கருப்பையா, கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போனார். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள எலுமிச்சை தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.