புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு யூசிஓ பேங்க் சாலையில் நேற்று தர்மராஜ் (63) என்பவர் சாலையை கடக்க முயன்றபோது, எதிரே வந்த சீனிவாசன் (76) ஓட்டி வந்த பைக் மோதியதில் தர்மராஜிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தர்மராஜ் அளித்த புகாரின் பேரில் வடகாடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.