புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் வாகனங்களை துரத்தி கடிக்க முயல்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் நாய்கள் துரத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.