ஆலங்குடி: வீட்டில் பதுங்கிருந்த விஷப் பாம்பு -பரபரப்பு!

1பார்த்தது
ஆலங்குடி: வீட்டில் பதுங்கிருந்த விஷப் பாம்பு -பரபரப்பு!
ஆலங்குடி அருகே பாப்பன்பட்டி கிராமத்தில் கைலாசம் என்பவரின் வீட்டில் விஷப்பாம்பு புகுந்ததால் அச்சமடைந்த குடும்பத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து பாம்பை பத்திரமாக மீட்டனர். பின்னர், வனப்பகுதியில் பாம்பை விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.