புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடியில், குடும்ப தகராறு காரணமாக தாய் வீட்டிற்கு சென்ற மனைவி ராதாவை, கணவர் குமரேசன் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராதாவின் புகாரின் பேரில், போலீசார் குமரேசனை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.