புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நேற்று (பிப். 19) ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், காய்கறி கடை நடத்தி வந்த கண்ணுசாமி (45) என்பவரின் கடையில் சோதனை நடத்தினர். அப்போது, 31 போதை பொருள் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக கண்ணுசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி, பின்னர் கைது செய்தனர். அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.