புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கூலாச்சி கொள்ளையைச் சேர்ந்த ராமலிங்கம் (70) என்பவர், அப்பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.