புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வள்ளுவர் திடல் அருகே நேற்று குமார் (66) மற்றும் பசீர் முகமது ஆகியோர் மூன்று இலக்க லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கறம்பக்குடி காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிந்து, குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 5 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.