புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டை பகுதியில் ரூபாய் 48 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில், புதுக்கோட்டை-அறந்தாங்கி நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவ. வீ. மெய்யநாதன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி சிறப்பித்தார். இந்த நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.