புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், அணவயல் எல். என். புரம் ஊராட்சியில், ரூ. 2 கோடியே 23 இலட்சம் மதிப்பீட்டில் ஆலங்குடி-அணவயல் சாலை முதல் நெடுவாசல் மேற்கு இணைப்புச் சாலை வரை புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை சிறப்பித்தார்.