புதுக்கோட்டை - தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் உள்ள அரியானிப்பட்டியில், காஞ்சிபுரத்தில் இருந்து காரைக்குடிக்குச் சென்ற வேன் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் கந்தர்வகோட்டை மற்றும் தஞ்சை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.