செம்பட்டிவிடுதி அருகே கம்மங்காடு மேலப்பட்டியைச் சேர்ந்த மாரியாயி(63) என்பவர், வீட்டில் மின் விசிறியை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுகை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செம்பட்டிவிடுதி போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.