புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மேல வீதியில் நேற்று பரமசிவம்(40) என்பவர் சாலையில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரது உடல் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து பரமசிவத்தின் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.