கறம்பக்குடி அருகே காத்தம்பட்டி மாற்றுத்திறனாளி பெண்ணை, இரண்டு நபர்கள் நேற்று காரில் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்தில், இரண்டாவது குற்றவாளி சேகர் சற்றுமுன் மலையூர் காவல்துறையால் திண்டுக்கல்லிலில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரை கண்டுபிடிக்க கோரி சில மணி நேரத்திற்கு முன்பாக, சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள் இதனால் கலைந்து சென்றனர்.