புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாரிமுத்து(49) என்பவர், 2023 ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை வன்புணர்வு செய்த வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கனகராஜ் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாரிமுத்து மீதான வழக்கு விசாரணை நேற்று (மே 26) முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.