புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பிலாபுஞ்சை பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி (21) என்பவர் கடந்த 23ஆம் தேதி தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் பலா காய்களைப் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.