புதுக்கோட்டை மாவட்டம் ஆயிப்பட்டி பகுதியில் இயங்கி வந்த பெட்டிக்கடை ஒன்று மூடப்பட்டு உரிமையாளர் வீட்டிற்கு சென்ற நிலையில், திடீரென தீப்பிடித்து எரிந்தது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் ஆலங்குடி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தால் கடை முழுவதும் எரிந்து சேதமடைந்தது.