புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தர்ம சாஸ்தா ஐயப்பன் சுவாமி கோவிலில் 26-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் நல்ல மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும், தொழில் வளர்ச்சி பெருகவும், உலக அமைதி வேண்டியும் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.