கீரமங்கலத்தில் சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது

77பார்த்தது
கீரமங்கலத்தில் சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த மாங்காட்டை சேர்ந்தவர் ஞானசேகரன் (60), ஷனார் (44). ஆகிய இருவரும் கீரமங்கலம் சந்தைப்பேட்டையில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். இதனை அடுத்து அந்த வழியே சோதனையில் ஈடுபட்டிருந்த கீரமங்கலம் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 100 மதுபான பாட்டில்களையும் ஒரு பைக்கையும் பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.