கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த ஆலங்குடியைச் சேர்ந்த ஸ்ரீதர் மனைவி மாலதி என்ற பெண்மணியை, அங்கு வந்த மாடு ஒன்று இடுப்பில் முட்டியதில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவர் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.