புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அம்பேத்கர் நகர் பகுதியில் நேற்று (மார்ச். 2) ரோந்து பணியில் ஈடுபட்ட நாகுடி காவல்துறையினர், அனுமதியின்றி மது விற்ற சிவராஜ் (37) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணைக்குப் பிறகு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.