அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த உடற்பயிற்சி கூட உரிமையாளர் முருகேசன் (28), உடற்பயிற்சி கூடத்திற்கு வருபவர்களிடம் வெளிநாட்டில்
வேலை வாங்கி தருவதாக கூறி, அவர்களிடம் இருந்து ரூ. 29 லட்சம் பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சென்னையில் வைத்து முருகேசனை நேற்று கைது செய்தனர்.