புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, மணமேல்குடி தாலுகாவில் உள்ள வடக்கு அம்மாபட்டினம் கடற்கரையில், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மீனவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைசாமி தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா முன்னிலையில் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.