ஆயிங்குடி: அங்கன்வாடியை திறந்து வைத்த அமைச்சர்!

0பார்த்தது
ஆயிங்குடி: அங்கன்வாடியை திறந்து வைத்த அமைச்சர்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆயிங்குடி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த புதிய அங்கன்வாடி மையம் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

தொடர்புடைய செய்தி