புதுக்கோட்டை மாவட்டம் புறங்காடு பகுதியில் இன்று காலை நெடுங்குடி கைலாசநாதர் கோயிலுக்கு சென்று திரும்பிய மினி சரக்கு வாகனம் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் வந்த 10 பேர் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த கணவன் மனைவி இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.