புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே நல்லூர் கிராமத்தில் உள்ள சங்கிலி கருப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி பந்தயம் இன்று (ஜுன் 15) நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, இராமநாதபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது.