புதுக்கோட்டை மாவட்டம் சிறுவரை பகுதியில் சாலைகளில் அதிகளவு மாடுகள் சுற்றி திரிவதால் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சாலையில் அதிகளவு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் செல்வதால், ஊராட்சி நிர்வாகம் இப்பிரச்சனையில் தலையிட்டு சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டங்களில் ஈடுபடவும் மக்கள் தயாராகி வருகின்றனர்.