அறந்தாங்கி அருகே சொகுசு கார் விபத்து: 2 பேர் படுகாயம்

850பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப்பட்டு பாலம் அருகே, அறந்தாங்கி நோக்கி வந்த சொகுசு கார் நிலைதடுமாறி புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கொளக்குடி பகுதியைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.