புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மூக்டியைச் சேர்ந்த மெய்யர் என்பவர், சமூக வலைதளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலினை அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டார். இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் அணியினர் அளித்த புகாரின் பேரில், அறந்தாங்கி காவல்துறையினர் நேற்று (பிப். 17) மெய்யர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.