புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நெட்டியேந்தல் கிராமத்தில் இன்று சட்டவிரோதமாக தென்னங்கள்ளு இறக்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (54), சத்திவேல் (60), பிரபு (45) ஆகிய 3 பேரை கைது செய்து, தென்னை மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பானையை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.