புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே தனியார் கல்லூரி ஒன்றில் சங்கர் (45) என்பவர் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அறந்தாங்கி காவல்துறையினர் அவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 மதுபான பாட்டில்களும், ரூ. 500 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.