ஆவுடையார் கோவிலை சேர்ந்த மணிகண்டன் (28) என்பவர் நேற்று அறந்தாங்கியில் இருந்து தனியார் பேருந்தில் பயணம் செய்தபோது, பேருந்தின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் பேருந்து ஓட்டுநர் சுப்ரமணியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.