புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ், அப்பகுதியில் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், கீரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, கயிறு கட்டி சுரேஷை உயிருடன் பத்திரமாக மீட்டனர். கிணற்றில் விழுந்த சுரேஷை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.