பண மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டு தர மனு

6பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்த முருகேசன், வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி 50க்கும் மேற்பட்டோரிடம் சுமார் இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்து இரண்டு ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், தனிப்படை அமைத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அவரிடம் இருந்து பணத்தை மீட்டுத் தர வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி