புதுகை: போதை ஊசி பயன்படுத்திய 3 பேர் கைது

751பார்த்தது
புதுகை: போதை ஊசி பயன்படுத்திய 3 பேர் கைது
அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் ஆய்வாளர் செந்தூரபாண்டியன் தலைமையில் நேற்று (பிப்ரவரி 13) அறந்தாங்கி அங்காளம்மன் கோயில் பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, போதை ஊசி வைத்திருந்த ராஜ்மோகன், சீனிவாசன், ராஜேஸ்வரன் ஆகிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி