அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே நேற்று இரவு சென்ற லாரி ஒன்று மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் மின்கம்பம் சாய்ந்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் அதிகம் செல்லும் இந்த சாலையில் மின்கம்பம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.