புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே கரகத்திக்கோட்டை மஞ்சக்குடி சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இத்ரீஸ் கான் (28), இம்ரான் கான் (30), முகமது அப்துல்லா (28) ஆகிய மூவரை கோட்டைப்பட்டினம் காவல்துறையினர் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். ரோந்து பணியின்போது காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.