நடைபாதையை மீட்டுத் தர கோரிக்கை!

116பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்பட்டி துவார் பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் சாலையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அருணாவை சந்தித்து மனு அளித்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.