புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா ஒக்கூர் கிராம உதவியாளர் ராமநாதன் (40) நேற்று இரவு குளிக்கச் சென்றவர் காலை வரை வீடு திரும்பாததால், குடும்பத்தினர் தேடிச் சென்றனர். கண்மாய்க் கரையில் அவரது உடல் மிதந்து கிடந்தது. கரூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த காவல்துறையினர் ராமநாதனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கால் தடுமாறி விழுந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.