
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
விராலிமலை எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் வீட்டிற்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதேபோன்ற ஒரு மிரட்டல் மற்றொரு இடத்திற்கும் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




























