
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த 28 வயது கூலித் தொழிலாளி சரவணகுமார், 17 வயது பள்ளி மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில், கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, போக்சோ சட்டத்தின் கீழ் சரவணகுமாரைக் கைது செய்தார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
























